×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜாக்பட் ஆட்சியை பிடிக்க போய் இப்போ படுதோல்வியில் எடப்பாடி! கொங்கு மண்டலம் இனி எங்க கையில்... செங்கோட்டையன் அவருக்கு கொடுத்த பலமான சப்போர்ட்! அரசியல் பரபரப்பு..!!!

எடப்பாடி பழனிசாமி தலைமையை விமர்சித்த செங்கோட்டையன், அதிமுகவில் நீக்கங்கள் குறித்தும் கொங்கு மண்டல அரசியல் நிலவரம் குறித்தும் கோவையில் பேசியுள்ளார்.

Advertisement

எந்த தலைமைக்கு மன்னிக்கும் தன்மையும் பெருந்தன்மையும் இல்லையோ, அந்த தலைமை நீண்ட காலம் நிலைத்திருக்காது என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து பேசினார். காலத்தின் தீர்ப்பே எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பதிலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கப்படுகிறார்கள்

அதிமுகவில் ஒவ்வொருவராக அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியேற்றப்படுவதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆளுமையுடன் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி விடுத்த பகிரங்க எச்சரிக்கை...! அதிமுக-வில் வெடித்த உட்கட்சி மோதல்..!!!

பலரது உழைப்பால் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தவர், கட்சியில் நூற்றுக்கணக்கானோரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைப்பது சரியல்ல என விமர்சித்த அவர், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் உயர்த்துவதில் எஸ்.பி. வேலுமணி முக்கிய பங்கு வகித்தவர் என்பதை சுட்டிக்காட்டினார்.

வேலுமணியுடனான சந்திப்பு குறித்து விளக்கம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியை சந்தித்தது குறித்த கேள்விக்கும் செங்கோட்டையன் பதிலளித்தார். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என்றும், அப்போது அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் 'ஜாக்பாட் ஆட்சி' விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்த செங்கோட்டையன், திமுகவுடன் இணைந்து ஜாக்பாட் அடிக்க முயன்று தோல்வியடைந்தது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.

கொங்கு மண்டலம் TVK தலைமையில் வலுவாக உள்ளது

கொங்கு மண்டல அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், யாராலும் யாருடைய செல்வாக்கையும் குறைத்துவிட முடியாது என்றார். கொங்கு மண்டலம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் வலுவாக இருப்பதாகவும், தனித்துப் போட்டியிட்டு 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பெருமை தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கொங்கு மண்டலம் 'வெற்றித் தளபதி' தலைமையில்தான் பயணிக்கும் என்றும் செங்கோட்டையன் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! தவெக பக்கம் தாவும் முக்கியப் புள்ளி... கலக்கத்தில் அதிமுக!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#செங்கோட்டையன் #எடப்பாடி பழனிசாமி #SP வேலுமணி #கொங்கு மண்டலம் #TVK அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story