அமைச்சர் சரத்குமாருக்கு கல்தா... பழைய வீடியோவால் வந்த வினை! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! இடைத்தேர்தல் அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!!!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர் சரத்குமாருக்கு பொறுப்பு வழங்கப்படாதது தவெக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.
தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் , தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக தவெக தலைமை தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சரான சரத்குமாருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மதுராந்தகத்துக்கு ஆதவ் அர்ஜுனா பொறுப்பு
மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவின் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் உள்ளிட்டோர் இணைப் பொறுப்பாளர்களாகவும், சில எம்.எல்.ஏக்கள் துணைப் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சரவையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்...! தவெக - வில் அடுத்த விக்கெட் அவுட்? பரபரக்கும் அரசியல் களம்..!!!
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வரும் நிலையில், அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள சரத்குமார் பட்டியலில் இடம்பெறவில்லை. இதே நேரத்தில் தாராபுரம் தொகுதிக்கான பணிக்குழுவில் அங்குள்ள மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சரத்குமாருக்கு பொறுப்பு வழங்கப்படாதது குறித்து கட்சிக்குள் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரல் வீடியோ சர்ச்சையும் பின்னணியும்
சரத்குமார் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பொடிபோன்ற பொருளை ஏடிஎம் அட்டை மற்றும் ரூ.500 நோட்டின் உதவியுடன் கையாளும் காட்சி இடம்பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகின. இதை சிலர் போதைப்பொருளுடன் தொடர்புபடுத்தி விமர்சித்தனர்.
இதற்கு சரத்குமார் விளக்கம் அளித்தபோது, அந்தப் பொருள் போதைப்பொருள் அல்ல என்றும், உடல்நலக்குறைவால் இருந்த தனது குழந்தைக்கு வழங்குவதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை பொடியாக்கியதாகவும் தெரிவித்தார். குடும்பத்துடன் ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்றபோது நடந்த சம்பவம் அது என்றும் அவர் கூறினார்.
அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு
இந்தப் பின்னணியில் சரத்குமார் இடைத்தேர்தல் பணிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் அவருடைய பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து தவெக தலைமை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் தற்போது உறுதி செய்யப்படாத அரசியல் தகவல்களாகவே உள்ளன.
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தவெகவுக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்தல் பணிக்குழு நியமனங்களில் தவெக தேர்தல் பொறுப்பு தொடர்பாக வெளியாகியுள்ள மாற்றங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: சற்று முன்.... பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்..! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! வெளியிட்ட பரபரப்பு பதிவு...!!!