×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகும் முக்கிய இரண்டு புள்ளிகள்.! கடும் கலக்கத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினர்.!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து போட்டியியிட்ட

Advertisement

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் இருந்து சிலர் வெளியேறுவது எங்கும் காணக் கிடைக்கும் காட்சிதான். ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தூண்களாக கருதப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தலைமையில் ஜனநாயகம் இல்லை என முக்கிய தலைவரான மகேந்திரன் பேட்டி அளித்து விலகினார். துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள், களையே தன்னை களையெடுத்துக்கொண்டது என கமல் அறிக்கை விட்டார். இன்னும் பலர் தன்னை தொடர்ந்து வெளியேறுவார்கள் என மகேந்திரன் கூறியிருந்தார்.

இந்தநிலையில், தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளார்.

இது தொடர்பாக சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நட்பையும் நேசத்தையும் காட்டிய கமல் சாருக்கும் எமது குழுவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

சந்தோஷ்பாபு இந்த செய்தியை வெளியிட்ட சில நிமிடங்களில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #padmapriya #santhosh babu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story