×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுக-வின் அடுத்த விக்கெட் அவுட்! இயக்குனர் ஆர்.வி உதயகுமார் திடீர் விலகல்! 25 வருஷ பயணம் முடிவுக்கு வந்தது..!!!

அதிமுக கலைப்பிரிவு செயலாளர் ஆர்.வி. உதயகுமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் விலகல்கள் கட்சிக்குள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. அந்த வரிசையில், கட்சியின் கலைப்பிரிவு செயலாளரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

25 ஆண்டுகால பயணத்திற்கு முற்றுப்புள்ளி

கடிதத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் செயல்பட்டு வந்ததாக ஆர்.வி. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். தற்போது கலைப்பிரிவு செயலாளராக இருந்தாலும், கட்சியின் தற்போதைய நிலை குறித்து கவலையும் வேதனையும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போதைய சூழலில் கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கனத்த மனதுடன் அதிமுகவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தொடர் விலகளால் தத்தளிக்கும் தாமரை கட்சி...! பாஜகவின் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் திடீர் ராஜினாமா! பரபரக்கும் அரசியல் களம்..!!!

அதிமுகவில் தொடரும் விலகல் அலை

சமீப காலமாக அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி தலைவர்கள் விலகி வருகின்றனர். ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

இதற்கிடையில், பல முன்னாள் அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் சூழல் நிலவுகிறது. நடிகை கௌதமியின் விலகலுக்குப் பிறகு தற்போது ஆர்.வி. உதயகுமாரும் கட்சியை விட்டு வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் யார் யார் முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: அதிமுக வின் அனைத்து பொறுப்பிலிருந்தும் திடீரென விலகிய முக்கிய புள்ளி! அடுத்தடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#RV Udhayakumar #அதிமுக #AIADMK #தமிழக அரசியல் #TVK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story