×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ. 2 கோடிப்பு.. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பேரம்.. லீக்கான ஆடியோ வைரல்.!  

TVK Coimbatore: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ. 2 கோடி பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. 

Advertisement

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன. 

உள்ளாட்சி தேர்தல்: 

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, தற்போது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பட்ஜெட் தாக்கலுடன் விவாதங்கள், எதிர்க்கட்சிகளின் போர்கொடிகள் என விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இதனிடையே, அடுத்தகட்டமாக உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளது. 

இதையும் படிங்க: திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சு.. பதிலடியால் பரபரப்பு.! 

ஆர்வம்: 

உள்ளாட்சி தேர்தல் உட்பட பிற தேர்தல்களில் போட்டியிட தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஆர்வம் காண்பித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மாவட்ட & மாநில நிர்வாகிகள், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் எழுகின்றன. 

ஆடியோ: 

இந்நிலையில், திருப்பூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ. 2 கோடி செலவாகும் என பேசியதாக கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது. பல்லடம் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்ளாட்சி தேர்தலில் கணபதிபாளையம் பஞ்சாயத்து தலைவர் போட்டிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே சங்கரிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

2 கோடி செலவாகும்: 

இந்த விஷயத்துக்கு பதிலளித்த மாவட்ட செயலாளர், "ஒரு கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை செலவாகும். நீ எப்படி இவ்வுளவு தொகை செலவு செய்வாய்? எப்போதும் எம்.எல்.ஏ அலுவலகத்தில் தானே இருக்கிறாய்?. கட்சி வேலைகளை செய்வதில்லை. எல்லோருக்கும் பொறுப்பு வாங்கிக்கொடுத்துவிட்டு நான் இப்படி இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. 

பதில்: 

இதுதொடர்பாக ஜி.கே. சங்கரிடம் கேட்டபோது, "உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பால சுப்பிரமணியனிடம் பணம் கேட்கவில்லை. கட்சிக்கூட்டத்தில் பேசிய விஷயத்தை எனக்கு எதிராக செயல்படும் நபர் குரலை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள். உன்னால் செலவு செய்ய இயலுமா? என்று தான் கேட்டேன். அது தவறான உள்ளடக்கத்துடன் தவறாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட ஆடியோ பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை" என பேசினார். 

இதையும் படிங்க: தனியார்மயம்? தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அறிவிப்பு என்ன? எகிறும் எதிர்பார்ப்பு.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #TVK #Palladam #Panchayat President
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story