புதிய பொறுப்பை ஏற்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முக்கிய புள்ளி ! தவெகவில் இணைவு இல்லை.... ஏமாற்றத்தில் CM விஜய்!!!
அதிமுகவில் புதிய பொறுப்புகள் தொடர்பாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் இபிஎஸை சந்தித்து அமைப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார். தவெகவில் இணையவுள்ளதாக பரவிய வதந்திக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் புதிய நிர்வாகப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ள நிலையில், ஆர்.காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இபிஎஸை சந்தித்த முன்னாள் அமைச்சர்
சமூக வலைத்தளங்களில் ஆர்.காமராஜ் கட்சியை விட்டு விலகலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அவர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனக்கு வழங்கப்பட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவரைச் சுற்றியிருந்த அரசியல் யூகங்களுக்கு முடிவு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: திடீர் ட்விஸ்ட்! அதிமுகவில் இணைந்தனர்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!
சில மூத்த தலைவர்கள் அதிருப்தியில் தொடர்வு
அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி உள்ளிட்டோர் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. புதிய நிர்வாக அமைப்பு தொடர்பான அதிருப்தி இன்னும் முழுமையாக அடங்காத நிலை நீடித்து வருகிறது.
இபிஎஸ் தரப்புக்கு கிடைத்த நிம்மதி
முன்னதாக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் பலம் குறையும் என்ற எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று ஆர்.காமராஜ் கட்சிப் பொறுப்பை தொடர ஒப்புக்கொண்டிருப்பது, இபிஎஸ் தரப்புக்கு முக்கியமான அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிருப்தி இன்னும் அடங்கவில்லை... எடப்பாடியை மதிக்காமல் வேலுமணி செய்த அந்த ஒரு காரியம்!!!