×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனைவருக்கும் எழுந்த தாடியின் ரகசியம்!. வெளிப்படையாக கூறிய அன்புமணி ராமதாஸ்!.

அனைவருக்கும் எழுந்த தாடியின் ரகசியம்!. வெளிப்படையாக கூறிய அன்புமணி ராமதாஸ்!.

Advertisement


நாடாளுமன்ற உறுப்பினர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்  கடந்த சில நாட்களாக தாடியுடன் பொது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். கடந்த 16 ஆம் தேதி மறைந்த முன்னாள் பாமக எம்எல்ஏ மாவீரன் ஜெ.குரு சிலை திறப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் தாடியுடன் காணப்பட்டார். 

எப்பொழுதுமே கிளின் ஷேவ் செய்து கொண்டு பளபளவென வரும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த திடீர் மாற்றம் பலர் மனதிலும் எதற்காக தாடி வளர்க்கிறார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு அன்புமணி அவர்கள் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் "தனது இளைய மகளின் ஆசைக்காக தான் தாடி வளர்க்கிறேன்" அப்பா தாடி வையுங்கள் என கேட்டுக்கொண்டதால் மக்களுக்காக இதை வைத்துள்ளேன் என கூறினார். 

மேலும் பாமக கட்சியினரும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு இந்த கெட்டப் நன்றாக இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anbumani ramathas #pmk #beard
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story