×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் 40 வருஷமா இங்க தான் இருக்காரு... இங்கயே கட்டிப்பிடிக்க வேண்டியது தானே! இனி நீங்க கட்டிப்பிடிக்க வேண்டிய ஆளே வேற... ஆர்.பி.உதயகுமாரின் பேச்சு வைரல்..!!!

மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அஜித் மற்றும் லண்டன் சந்திப்பு குறித்து நகைச்சுவையாகக் கூறிய கருத்துகள் தொண்டர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தின. தனுஷ் குறித்த அவரது பேச்சும் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய நகைச்சுவையான கருத்துகள் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தின. அஜித் தமிழ்நாட்டிலேயே 40 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், அவரைச் சந்திக்க லண்டன் செல்ல வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நடிகர் தனுஷ் குறித்தும் அவர் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.

‘அஜித்தை லண்டன் சென்றுதான் கட்டிப்பிடிக்க வேண்டுமா?’

மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சிக் காலத் திட்டங்கள் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது சினிமா பிரபலங்களை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி விமர்சித்த அவர், நடிகர் அஜித்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்..! இருகரம் கூப்பி வரவேற்போம்... சற்றுமுன் அரசியலில் புதிய பரபரப்பு..!!!

“அஜித் இங்கேயேதான் 40 வருஷமா இருக்காரு. இங்கேயே கட்டிப்பிடிக்க வேண்டியதுதானே... அதை விட்டுட்டு லண்டன் போய் கட்டிப்பிடிக்கிறாங்க” என்று பேசியுள்ளார். அவரது இந்தக் கருத்தைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் சிரித்தனர்.

தனுஷ் குறித்தும் பேசிய முன்னாள் அமைச்சர்

அதன்பிறகு தனது பேச்சைத் தொடர்ந்த ஆர்.பி.உதயகுமார், “இனிமே நீங்க கட்டிப்பிடிக்க வேண்டிய ஆள் தனுஷ்தான்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அண்மைக்கால சினிமா மற்றும் அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பேச்சு

அரசியல் மேடையில் சினிமா பிரபலங்கள் குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசிய இந்தக் கருத்துகள், கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளன. அவரது பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அஜித் மற்றும் தனுஷ் குறித்த அவரது விமர்சனங்கள் விவாதப் பொருளாகியுள்ளன.

 

இதையும் படிங்க: பாஜக-வில் இணையும் தனுஷ்...? வெள்ளி விளக்கில் இருந்த அந்த ஒரு குறியீடு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஆர்.பி.உதயகுமார் பேச்சு #RB Udayakumar #அஜித் லண்டன் சந்திப்பு #தனுஷ் அரசியல் #அதிமுக பொதுக்கூட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story