அதிமுகவில் அதிருப்தி! சசிகலாவுடன் இணையும் முக்கிய புள்ளி...? அதிர்ச்சியில் எடப்பாடி!!!
விருதுநகர் அரசியலில் அதிரடி திருப்பம். முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் திருச்சுழி போட்டியிலிருந்து விலகியதாக அறிவிப்பு. கட்சி உள்ளக மோதல் வெளிச்சம்.
விருதுநகர் மாவட்ட அரசியல் தளத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், திருச்சுழி தொகுதியில் போட்டியிடவே இல்லை என திடீரென அறிவித்துள்ளார். கட்சிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபமே இந்த முடிவுக்குக் காரணம் என கூறப்படுகிறது. அவரது இந்த அறிவிப்பு தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தொகுதி ஒதுக்கீடு விவகாரம்… குற்றச்சாட்டு
தகவலின்படி, ராஜவர்மனுக்கு மீண்டும் சாத்தூர் தொகுதி வழங்கப்படாதது குறித்து அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, நயினார் நாகேந்திரனின் தலையீட்டால் தான் வாய்ப்பு மறுக்கப்பட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மீது அவர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
அடுத்த கட்டம்… கட்சி மாற்றம்?
ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து, பின்னர் மீண்டும் திரும்பியவர் ராஜவர்மன். இந்நிலையில், தற்போது சசிகலா தலைமையிலான ‘அனைந்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்சித் தாவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: பதவி உங்களுக்கு தான்.... வாங்க! மீண்டும் அதிமுகவில் இணையும் முக்கிய புள்ளி! குஷியில் துள்ளும் எடப்பாடி.!
தென் மாவட்டத்தில் அதிர்வலை
திருச்சுழி தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து ராஜவர்மனை நிறுத்த அதிமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர் போட்டியிலிருந்து விலகியதும் சூழ்நிலை மாறியுள்ளது. இந்த அரசியல் பரபரப்பு தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சற்று முன்... திடீர் திருப்பம்! அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஸ்..? செல்லூர் ராஜுவின் பேட்டி அரசியல் களத்தில் பரபரப்பு!