×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Just In: "ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன்... மக்களுக்காகத்தான் வருவேன் " திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ!!!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வந்தால் அது மக்களுக்காக மட்டுமே என்றும், கட்சியில் உழைத்தவர்களுக்கே முன்னுரிமை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவிய நிலையில், அதற்கு அவர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலுக்கு வந்தால் அது பதவிக்காக அல்ல, மக்களுக்காக மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

''இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை''

திருச்சி கிழக்கு தொகுதி குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், “ஆசைக்காக அரசியலுக்கு வர மாட்டேன். மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என்று தெளிவாக கூறினார்.

இதையும் படிங்க: கிஜ்குல்லல்ல கோஜ்

''உழைத்தவர்களுக்கே வாய்ப்பு கிடைக்க வேண்டும்''

மேலும் அவர் பேசுகையில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்க வேண்டுமா, அல்லது விஜய் சார் ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே போஸ்டர் ஒட்டிய ஒருவர் நிற்க வேண்டுமா, அல்லது கட்சி தொடங்கிய நாளிலிருந்து உழைத்தவர் நிற்க வேண்டுமா என்பதை விஜய் சார் தான் முடிவு செய்வார். விதை போட்டவர், தண்ணீர் ஊற்றி மரத்தை வளர்த்தவர் இருக்கும்போது, அதன் பழத்தை நான் பறித்துக் கொள்ளக் கூடாது. அதுதான் தர்மம்” என்றார்.

கட்சியில் உழைத்த பிறகே பொறுப்பு

அரசியல் பயணம் குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கிய அவர், “முதலில் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும். பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதன் பிறகு தலைமையினர் வாய்ப்பு கொடுத்தால் அந்த பொறுப்பில் இருந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதுவே சரியான அரசியல் நடைமுறை” என்று கூறினார். ராகவா லாரன்ஸின் இந்த ராகவா லாரன்ஸ் கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... அண்ணாமலையுடன் கைக்கோர்க்கப் போகும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#raghava lawrence #திருச்சி கிழக்கு #vijay #TVK #by election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story