×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்க்கு அனைவரும் அள்ளித்தரும் ஆதரவு! அவருக்கு தான் மெஜாரிட்டி இருக்கு.... அதுனால அவர் தான் முதல்வர்! ஆளுநரை விளாசி தள்ளிய பிரகாஷ் ராஜ்..... வைரலாகும் வீடியோ..!!!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறிக்கிடையே, விஜய்க்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும் ஆட்சி அமைப்பதில் தெளிவு ஏற்படாத சூழல் தொடர்கிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது.

ஆளுநர் மீது பிரகாஷ் ராஜ் கடும் விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், “மக்கள் தீர்ப்பு தெளிவாக வெளிவந்துவிட்டது. விஜய்க்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆளுநரின் தற்போதைய அணுகுமுறை அரசியலமைப்பின் அடிப்படை மரபுகளுக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை மதிப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்த வாழ்த்து செய்தி! ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!!!

பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் தவெக

ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்குப் பலம் குறைவாக இருந்தாலும், விஜய்க்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களின் கடிதங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தேவையான ஆதரவு இருந்தும் அழைப்பு வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடியுள்ளார்.

தொண்டர்களிடையே அதிகரித்த உற்சாகம்

பிரகாஷ் ராஜின் இந்த பதிவு வெளியானதும் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் அதை பரவலாக பகிர்ந்து வருகின்றனர். அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் வந்த இந்த ஆதரவு பதிவு, விஜய் ஆதரவாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: கலைஞர் கனவில் கூட இப்படி நடக்கும்ன்னு நினைச்சிருக்க மாட்டாரு! பின்னாடி நிற்பவர்களை எளிதில் எடை போட கூடாது.... பிரபல இயக்குனரின் நக்கல் கலந்த நய்யாண்டி பதிவு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#prakash raj #விஜய் #TVK #தமிழக அரசியல் #Governor issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story