BREAKING: வெடித்தது புதிய சர்ச்சை! கசிந்த ஆடியோவால் பாமக கோட்டையில் பரபரப்பு! அம்பலமான ரகசிய டீல்!!!
பாமக நிறுவனர் ராமதாஸின் பேரனுக்கு MLA சீட் தருவது குறித்ததாக கூறப்படும் ஆடியோ கசிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு வரவிருக்கும் தேர்தலில் MLA சீட் வழங்கப்படும் எனக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த கசிவு, கட்சியின் உள் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆடியோவில் வெளியான தகவல்கள்
அன்புமணி ராமதாஸின் ஆதரவாளராகக் கூறப்படும் கணேஷ்குமார், முகுந்தனை ஒரு தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம் என உறுதியளிக்கும் வகையில் பேசும் உரையாடல் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும், தேர்தல் செலவுகளை முழுமையாக அன்புமணி ஏற்றுக் கொள்வார் என்றும் அந்த ஆடியோவில் குறிப்பிடப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாரிசு அரசியல் குற்றச்சாட்டு மீண்டும்
இந்த ஆடியோ வெளிவந்ததையடுத்து, வாரிசு அரசியல் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கட்சிப் பதவிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற முக்கிய விஷயங்கள் முன்னதாகவே முடிவாகி விடுகின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் கட்சியின் உள் அரசியலில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் முதலமைச்சர் ஆவாரா? ஒரே போடாய் போட்ட நடிகர் சிவகுமார் !!! இப்படி ஒரு பதிலா....!!!
சமூக வலைதளங்களில் பரபரப்பு
இந்த ஆடியோ கசிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து அரசியல் வட்டாரங்களிலும், மற்ற கட்சிகளிடையிலும் இந்த விவகாரம் குறித்து கடும் விவாதங்கள் நடந்து வருகின்றன. சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: தலையை வெட்டி வீசுடுவேன்... தவெக மாவட்டச் செயலாளரின் பகிரங்க மிரட்டல்! வைரலாகும் மிரட்டல் வீடியோவால் தலைமை நடவடிக்கை எடுக்குமா..?