×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற சில நிமிடங்களில் திடீரென அணைந்த விளக்குகள்....! காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்தது என்ன? காரில் தவித்த சௌமியா அன்புமணி....!!!

கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணிக்கு மின்தடை ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஜெனரேட்டர் இயங்காதது குறித்து பாமகவினர் விளக்கம் கோரி புகார் அளித்துள்ளனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த சௌமியா அன்புமணி, லால்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியபோது திடீரென மின்தடை ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜெனரேட்டர் வசதி இருந்தும் அது செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை பாமகவினர் முன்வைத்துள்ளனர்.

நிகழ்ச்சிகளை முடித்து விருந்தினர் மாளிகைக்கு சென்ற எம்எல்ஏ

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று நடைபெற்ற பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். குருங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியையும் தொடங்கி வைத்த அவர், அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு இரவு ஓய்வெடுப்பதற்காக லால்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING : திடீரென உடல்நலக்குறைவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்! அதிர்ச்சியில் திமுக வட்டாரம்...!!!

மின்தடையால் காரிலேயே காத்திருந்ததாக தகவல்

விருந்தினர் மாளிகைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அறைக்குள் செல்ல முடியாத சூழலில், சிறிது நேரம் தனது காரிலேயே அவர் காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னரும் மின்சாரம் வராததால், டார்ச் லைட் உதவியுடன் அறைக்குச் சென்று, அங்கிருந்து தனது அடுத்த பயணத்தைத் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

ஜெனரேட்டர் ஏன் இயங்கவில்லை? பாமக கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு விருந்தினர் மாளிகையில் ஜெனரேட்டர் வசதி இருந்தும், மின்தடை ஏற்பட்ட நேரத்தில் அது ஏன் இயக்கப்படவில்லை என்றும், விளக்கம் கேட்க மின்சாரத் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது இயல்பான மின்தடை அல்ல; திட்டமிட்டு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள், சம்பவம் குறித்து மின்சாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் திமுக நிர்வாகி வீட்டில் திடீர் போலீஸ் சோதனை...! என்ன காரணம்? அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pmk #சௌமியா அன்புமணி #Cuddalore #Power cut #அரசு விருந்தினர் மாளிகை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story