×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

PMK: பாமக தலைவர் பொறுப்பு.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள் - தேர்தல் ஆணையம் அதிரடி.!

PMK Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தலைவர் மாற்றம் குறித்து சிவில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளாக உடைந்து செயல்பட்டு வரும் பாமகவில், தலைவர் பொறுப்புக்கு பிரச்சனை நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்பதை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

பாமக தலைவர் அன்புமணி:

தேர்தல் ஆணையத்தையும் நாடி ராமதாஸ் தரப்பு புகார் பதிவு செய்த நிலையில், இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தரப்பை பாமகவாக ஏற்றுக்கொண்டது. கடிதங்களும் தலைவர் அன்புமணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது அன்புமணியை பாமகவின் தலைவராக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்துள்ளது. 

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.!!

சிவில் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்:

இந்நிலையில், ராமதாஸ் தரப்பு ராமதாஸ் தான் பாமக தலைவர் என போர்க்கொடி தூக்கி வருகிறது. அதுதொடர்பான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடந்த இன்றைய (பிப்.09) விசாரணையில், "தங்களின் ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தான் பாமக தலைவர். அதனை ஏற்க மறுக்கும் நபர்கள், சிவில் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுவர வேண்டும். அதுவரை அன்புமணி தான் தலைவராக இருப்பார்" என தெரிவித்துள்ளனர். 

ராமதாஸ் தரப்பின் ஆட்சேபங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு உரிய அனுமதி பெறும் பட்சத்தில், ராமதாஸ் தரப்பை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும். தேர்தல் ஆணையம் ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தரப்புக்கு பக்கபலமாக இருப்பதால், அன்புமணி ஆதரவாளர்களிடையே இந்த செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: Microplastic in Water Bottles: பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக்.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #anbumani ramadoss #தமிழக அரசியல் #அன்புமணி ராமதாஸ் #பாமக தலைவர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story