×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தேர்தலுக்கு பின் அவதிப்படப்போகும் விஜய்.?!"

தேர்தலுக்கு பின் அவதிப்படப்போகும் விஜய்.?!

Advertisement

அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பழம்பெரும் நடிகருமான பழ.கருப்பையா தனது சமீபத்திய பேட்டியில், 'தேர்தல் முடிவுக்கு பின் TVK தலைவர் விஜய் கட்டாயம் வருந்துவார்' என்று பேசி உள்ளார். 

தான் நடிகர் விஜய்யை சந்தித்தபோது, " 'முதலில் போட்டியிடும் காலகட்டங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுங்கள். அப்போதுதான் ஆட்சியைப் பிடிக்க முடியும்' என்று அறிவுரை கூறினேன். மேலும், 'கேப்டன் விஜயகாந்த் கூட அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின்னர் தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.' என்று கூறினேன்.

ஆனால், விஜய் எனது பேச்சை கேட்கவில்லை. அவர் எடுத்த இந்த முடிவுக்கு பின்னாளில் நிச்சயம் வருத்தப்படுவார்." என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அவர் விஜயுடன் சர்க்கார் படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார். சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்து அவர் பல்வேறு விவாதங்களை முன்வைத்து இருக்கிறார். 

ஏற்கனவே விஜயின் ஒவ்வொரு செயலும் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில் பழ.கருப்பையாவின் இந்த கருத்து தேர்தல் நேரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Vijay #pazha karupaiya #Admk #Election 2026
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story