திரிஷா விஜய் புத்தகமா..? எந்தப் பைத்தியக்காரனாவது வாங்குவானா..? நிச்சயமாக திமுகவினர் வாங்க மாட்டாங்க.. பரந்தாமன் ஆவேசம்..!!!
‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகத்தை திமுகவினர் வாங்க மாட்டார்கள் என பரந்தாமன் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் புகாரையும் அவர் மறுத்துள்ளார்.
‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகத்தை எந்த திமுககாரரும் வாங்க மாட்டார்கள் என்று திமுகவைச் சேர்ந்த பரந்தாமன் கடுமையாகத் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் தொடர்பான ஊழல் புகாருக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் திமுக மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
‘திரிஷா விஜய்’ புத்தகம் குறித்து பரந்தாமன் கருத்து
இதுகுறித்துப் பேசிய பரந்தாமன், “எந்தப் பைத்தியக்காரனும் ‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டான். திமுககாரன் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை வாங்க மாட்டான்” என்று காட்டமாகக் கூறியுள்ளார். மேலும், அந்தப் புத்தகம் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளன்று சீலிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாயில ஏதாச்சும் வந்துடும்..! உண்மையிலேயே தைரியம் இருந்தால் இத செய்யுங்க... அமைச்சர் ராஜ்மோகனுக்கு திமுக பரந்தாமன் விடுத்த அதிரடி சவால்..!!!
திமுக மீது திட்டமிட்டு பழி சுமத்துவதாகக் குற்றச்சாட்டு
புத்தக கொள்முதல் விவகாரத்தில் திமுகவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பரந்தாமன் சாடியுள்ளார். திமுக மீது பழிசுமத்துவதற்காகவே இதுபோன்ற பரப்புரைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு உடைந்தையா..? நீதிபதி குழுவை திடீர்னு தூக்கியது ஏன்.. தவெக அரசுக்கு எதிராக கனிமொழி கடும் கண்டனம்..!!!