×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"6 மாசமாச்சு... அப்டேட்டே இல்ல." அதிர்ச்சி முடிவெடுக்க துணிந்த ஓ.பி.எஸ்.! மகன் போட்ட அதிரடி உத்தரவாம்.!

6 மாசமாச்சு... அப்டேட்டே இல்ல. அதிர்ச்சி முடிவெடுக்க துணிந்த ஓ.பி.எஸ்.. மகன் போட்ட அதிரடி உத்தரவாம்.!

Advertisement

திமுகவில் இருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் இணைய முடிவு செய்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், அவர் விரைவில் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை கட்சியில் எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், திமுகவில் தொடர்வதை விட த.வெ.க.வில் இணைவதே அரசியல் ரீதியாக சிறந்த முடிவாக இருக்கும் என்று அவரது மகன் ரவீந்திரநாத் அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வால் பரபரப்பு..!!!

அந்த ஆலோசனையை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் அல்லது த.வெ.க. சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ops #dmk #TVK #politics news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story