அவசரப்பட்ட ஓ.பி.எஸ்.? மேலிடம் போட்ட உத்தரவு.! குழம்பி நிற்கும் நேரத்தில்., காய் நகர்த்தும்.. திமுக.!
பா.ஜா.காவை விட்டு விலக முடிவெடுத்த ஓ.பி.எஸ்
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இடையிலான பிரச்சனை காரணமாக அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் விலக்கப்பட்டார். மீண்டும் பலமுறை அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் முயற்சி செய்தபோதும் தோல்வியடைந்தார். அதன் பின் அவர் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணித்தார். இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக பன்னீர்செல்வம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இது பற்றிய அறிவிப்பை ஓபிஎஸ் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டு உறுதிப்படுத்தினார். பாஜகவிற்கு கீழ் செயல்பட்டு வந்த அவரது இந்த முடிவு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும், பாஜக தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில், ஓபிஎஸ்ஸிடம் அழைத்து பேசிய பாஜக மேலிடம் அவசரப்பட வேண்டாம் என்று ஓபிஎஸ்-ஐ எச்சரித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மிரட்டும் வில்லனாக சூர்யா.?! ரசிகர்களுக்கு மெர்சலான தகவல்.!
ஆகஸ்ட் 26 ஆம் தேதி மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். இதன் காரணமாக ஓபிஎஸ்-ம் அவரது ஆதரவாளர்களும் என்ன முடிவெடுப்பது என்பது புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. இதே நேரத்தில் ஓபிஎஸ்ஐ திமுக அணிக்கு அழைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "பகையை மறந்து இணைவோம்..."மீண்டும் இணைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி.? தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.!!