ஆகஸ்ட் 15-க்குள் நடக்கப்போகும் பெரிய சம்பவம்.... மேலும் 10 MLA-க்கள் ராஜினாமா? அதிமுகவை காலி செய்யும் 'ஆபரேஷன் L' பிளான்.... தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்!!!
அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் மீண்டும் கட்சி தாவல் குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
‘Operation L’ திட்டம் என்ற தகவல்
வெளியான தகவலின்படி, சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை உறுதி செய்யும் நோக்கில் Operation L என்ற பெயரில் ரகசிய அரசியல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யக்கூடும் என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிமேல் அடிவாங்கும் அதிமுக! தவெகவில் ஜெயகுமாரா? கசிந்த தகவலால் செம ஷாக்கில் எடப்பாடி..!!!
அரசியல் வட்டாரங்களில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ஏற்கனவே 6 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இணைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவல் அரசியல் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தலைவர்கள் அல்லது கட்சிகள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அதிமுகக்கு புதிய சவாலா?
இந்த தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில், அது அதிமுகவின் சட்டமன்ற பலத்திலும் உள்கட்சி அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் வரை இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத அரசியல் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... ஆதரவை ஆதரிப்பதே அசூர அரசியல்! விஜய் அமைச்சரவையில் சௌமியா அன்புமணி?... தமிழக அரசியலில் வெடித்த அடுத்த வெடிகுண்டு!!!