#BREAKING: "தாமரையின் ஒரு இதழைக்கூட அசைக்க முடியாது" - அண்ணாமலைக்கு எதிராக பொங்கிய தமிழிசை.. காரசார பேட்டி.!
Annamalai Vs Tamilisai: அண்ணாமலைக்கு ஆதரவு, வாழ்த்து எதுவும் கிடையாது என தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரையில் பேட்டி அளித்தார்.
அண்ணாமலையின் முடிவுக்கு எதிராக தமிழிசை சௌந்தர்ராஜன் காரசாரமான வாதங்களை முன்வைத்துள்ளார்.
அண்ணாமலையின் புதிய பாதை:
பாஜகவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய நபராக அறியப்பட்ட அண்ணாமலை, சமீபத்தில் தனியாக இயக்கத்தை தொடங்கி அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். இந்த விஷயம் காரணமாக பாஜகவில் இருந்து சிலர் விலகி அண்ணாமலையின் பயணத்தை தொடங்கி இருப்பதால், தமிழக பாஜகவில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் தங்களின் எதிர்கருத்துக்களை அண்ணாமலைக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊழல் செய்தால் என்ன தண்டனை? முக்கிய முடிவெடுத்த விஜய்? அமைச்சர் ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!
சுயநலவாதிகள் போயிருப்பார்கள்:
இந்நிலையில், இன்று மதுரையில் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எங்களது கட்சியில் லடசியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் லட்சம் என கூறுவதை நான் பொருட்படுத்தப்படவில்லை. ரத்தம், வியர்வை சிந்தி வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். இளைஞர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. சுயநலவாதிகள் சென்றிருப்பார்கள். பொதுநலவாதிகள் செல்லவில்லை.
இதழைக்கூட அசைக்க முடியாது:
பிரதமர், உள்துறை அமைச்சர் என யாரும் அண்ணாமலைக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆகையால், கட்சியில் இருந்து விலகி செல்வோருக்கு வாழ்த்து கிடையாது. எங்கள் கட்சி மிகமிக உறுதியாக இருக்கிறது. தாமரையில் இருந்து ஒரு இதழைக்கூட யாராலும் அசைக்க முடியாது. கட்டாயம் பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். இன்னொருவரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலைமை பாஜகவுக்கு இல்லை. காங்கிரஸ் பல முகத்தை காண்பித்து திமுகவினரின் முதுகில் குத்தினார்கள். அதுபோன்ற செயல்கள் எங்களுக்கு தேவையில்லை" என பேசினார்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் முடிவு.. 'ஆசியும் கிடையாது, ஒன்னும் கிடையாது' காரசாரமாக மனம்திறந்த நயினார் நாகேந்திரன்.!