பாஜகவின் வெற்றி ரகசியத்தை சிரித்துக்கொண்டே போட்டுடைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!!
nithin kadkari talks about bjp win stratergy
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி "நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அழித்துவிட்டோம், ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துவிட்டனர்" என வெளிப்படையாக கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளையாட்டாக பேசி பாஜகவின் வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். இதனை கிண்டல் அடிக்கும் விதமாக "நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மந்திரி நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொருப்பேற்று இருக்க வேண்டியதில்லை.
ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்" என சிறிது கொண்டே பேசியுள்ளார்.