×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வசைபாடி ஒதுக்கிய திமுக.. வாய்ப்பு கொடுத்த விஜய்.. மனம் திறந்த நாஞ்சில் சம்பத்.!

மதிமுக முன்னாள் நிர்வாகி நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

Advertisement

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் தனது அரசியல் வியூகத்தை வலுமையாக்கி வரும் நிலையில், நாஞ்சில் சம்பத் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார். விஜய் தனக்கு புதிய பிறப்பு தந்ததாகவும் உணர்ச்சிபொங்க உரைத்தார்.

2026 அரசியல் தேர்தல் போட்டியில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் அடுத்தடுத்து பல முக்கிய கட்சிகளில் இருக்கும் மூத்த நிர்வாகிகளை தன் வசப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. 

மனதளவில் உடைந்ததாக பேச்சு:

இந்நிலையில் வைகோவுடன் மதிமுகவில் மிகப்பெரிய அரசியல் பயணத்தை தொடங்கி கடந்த சில ஆண்டுகளாக அதிமுக, திமுக, டிடிவி தினகரன் என பல கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வந்த நாஞ்சில் சம்பத் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது திமுகவின் அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடி தீர்த்தனர். அதனால் நான் மனதளவில் உடைந்து போனேன். 

இதையும் படிங்க: 20 வயதில் அரசியல் பயணம் தொடங்கி... 50 ஆண்டு அரசியல் அனுபவம்! உங்கள் அனுபவம் கட்சிக்கு உறுதுணை! செங்கோட்டையன் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ!

புதிதாக பிறந்தது போல உணர்வு:

திமுக நடத்திய அறிவு திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்து இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அரசியல் கட்சிகளில் எந்த அரசியல் கட்சியிலும் நான் இணையவில்லை. பெரியார், அண்ணாவின் லட்சியங்களை பேசி வந்த நான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன். இதனை நான் புதிதாக பிறந்தது போல உணர்கிறேன். 

பரப்புரைக்கு அனுமதி:

தமிழ்நாடு குறித்து பேசுவதற்கு நிறைய இருக்கிறது. பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி அளித்திருக்கிறார். என்னை முடக்கி வைத்திருந்த பலருக்கும் தக்க பதிலடியாக விஜய் என்னை இயக்குவதற்கான வாய்ப்பை தந்துள்ளார். இளைஞர்களை வைத்து மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜயிடம் இருக்கிறது என பேசினார்.

இதையும் படிங்க: இபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கோபியில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nanjil sampath #நாஞ்சில் சம்பத் #TVK Vijay #திமுக #விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story