×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீக்குளிப்பதாக மிரட்டிய மனைவி! ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை.. சிகரெட்டால் வைத்த சூடு! 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி..! வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!

நாகர்கோவில் அருகே கணவரைக் கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடியதாக மனைவியும் 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அவரது மனைவியும் 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரைக் கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் ஏற்பட்டதாகக் காட்ட முயன்றதாக இருவர் மீதும் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கணவர் துன்புறுத்தியதாக மனைவி தரப்பில் தகவல்

இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (43), ரியல் எஸ்டேட் மற்றும் நிதித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மதுபோதையில் மனைவி பாரதியிடம் (37) தகராறு செய்து, செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காட்டித் துன்புறுத்தியதாகவும், சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாரதியும் அவரது 14 வயது மகனும் சேர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த சுரேஷின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திடீரென உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் வார்னிங்! முதல்வர் விஜய்யின் இறுதி முடிவு என்ன..? அரசியல் வட்டாரத்தில் விவாதம்..!!!

இயற்கை மரணம் எனக் கூறியதில் போலீசாருக்கு சந்தேகம்

சுரேஷ் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, அவரது கழுத்தில் தழும்புகள் இருந்ததை போலீசார் கவனித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது பாரதி தீக்குளிப்பதாக மிரட்டியதாகவும், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்ததும் போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

மனைவியும் 14 வயது மகனும் கைது

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படும் நிலையில், பாரதியையும் அவரது 14 வயது மகனையும் கைது செய்துள்ளனர். வழக்கின் முழுப் பின்னணி, சம்பவத்தில் இருவரின் பங்கு உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிறார் தொடர்புடைய வழக்கு என்பதால், அவருக்கான சட்ட நடைமுறைகள் சிறார் நீதிமுறை விதிகளின்படி மேற்கொள்ளப்படும்.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்! டெல்லியின் தரமான மூவ்... அரசியலில் அதிகரிக்கும் பரபரப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நாகர்கோவில் கொலை #பாரதி கைது #Nagercoil Murder Case #Tamil Nadu crime news #பூதப்பாண்டி போலீஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story