அடிமேல் அடிவாங்கும் அதிமுக! முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் திடீர் ராஜினாமா.! செம ஷாக்கில் எடப்பாடி!!!
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அதிமுகவின் சட்டப்பேரவை பலம் 41 ஆக குறைந்துள்ள நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கரூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேரில் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகரிடம் நேரில் வழங்கிய ராஜினாமா
சற்றுமுன் நடைபெற்ற இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமாவால், இதுவரை பதவியை விலகிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பாஜகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகிய அண்ணாமலை! ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை...!!!
அதிமுக பலம் 41 ஆக குறைவு
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் உறுப்பினர் பலம் 47-லிருந்து 41 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து நிகழும் இந்த அரசியல் மாற்றங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
காலியிடங்கள் 7 ஆக உயர்வு
தற்போதைய ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வரவிருக்கும் அரசியல் நகர்வுகள், இடைத்தேர்தல் சாத்தியக்கூறுகள் மற்றும் கட்சிகளின் வியூகங்கள் குறித்து மாநில அரசியல் வட்டாரத்தில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வால் பரபரப்பு..!!!