கொளத்தூர் MLA VS பாபுவின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? சென்னை மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ...!!!
மூச்சுக்கோளாறு காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 9 முதல் மருத்துவமனையில் சிகிச்சை
மூச்சுக்கோளாறு தொடர்பான சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா? முதல்வர் விஜய் என்ன செய்ய போகிறார்... பரபரக்கும் அரசியல் களம்...!!!
சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பு
தகவலின்படி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை முடிவுகளில் முன்னேற்றம்
அதேபோல், MGM Healthcare மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடல்நலப் பரிசோதனைகளின் முடிவுகளும் சாதகமான முன்னேற்றத்தைக் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு ரெடி....! தவெகவில் இணைய தயார் நிலையில் இருக்கும் 20 முக்கிய புள்ளிகள்...! தெறிக்கவிட்ட செங்கோட்டையன்....!!!