சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது பெரும் தவறு! மு.க ஸ்டாலின் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
mk stalin said dont open tasmac in chennai

கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் கட்டுப்பபாட்டு பகுதிகள் மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்தநிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை ஆகஸ்ட்
18 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனவும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில், "சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!” என்று பதிவிட்டுள்ளார்.