×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிழமைக்கு ஒரு ட்ரெஸ்..! சிஎம் சார்.. என்ன பயம்..? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்க... முதல்வர் விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்த ஸ்டாலின்...!!!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய் மீது மின்வெட்டு மற்றும் காவிரி விவகாரம் குறித்து விமர்சனம்

Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ரோடு ஷோ நடத்தினார். அமராவதி சிலை பகுதியில் தொடங்கிய பிரசாரத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் ஆட்சியை விமர்சித்துப் பேசினார்.

மின்வெட்டு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் விவசாயிகள், மீனவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராடும் நிலை இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குறிப்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில் 7 முதல் 8 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பிரசார உரையில் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: என்ன நடக்குது..? தவெக கூட்டத்திற்கு வந்த அமமுக MLA..! அதிர்ச்சியில் டிடிவி தினகரன்..! பரபரக்கும் அரசியல் களம்..!!!

முதல்வர் விஜய்யின் உடை மற்றும் அவரது வெளிப்புறத் தோற்றத்தையும் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். மக்களை ரோட்டில் அலையவிட்டுவிட்டு முதல்வர் பண்ணையார் போலப் பட்டு வேஷ்டி சட்டையில் பந்தா செய்கிறார்.ஜோசியர் சொன்னபடி கிழமைக்கு ஒரு டிரஸ் மாற்றுகிறார் என்றும் அவர் விமர்சித்தார். அவரது இந்த விமர்சனம் தொடர்பான கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

காவிரி விவகாரத்தில் விஜய்க்கு கேள்வி

தொடர்ந்து, தமிழக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையாக உள்ள காவிரி விவகாரத்தையும் மு.க.ஸ்டாலின் தனது உரையில் முன்வைத்தார். கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக முதல்வர் விஜய் போதிய குரல் எழுப்பவில்லை என அவர் குற்றம்சாட்டினார். சிஎம் சார்.. என்ன பயம்? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் எனச் சவால் விடுத்தார். இதுதொடர்பாக முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடைபெற்ற இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்களின் தொடர் பிரசாரங்களால் தொகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

 

இதையும் படிங்க: இதுதான் சரியான டைம்...! இடைத்தேர்தலில் வேலுமணி, CV சண்முகம் போட்ட பிளான்... அரசியலில் பரபரப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தாராபுரம் இடைத்தேர்தல் #MK Stalin #சுகன்யா #முதல்வர் விஜய் #காவிரி விவகாரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story