×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பு.. முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தலையில் காயத்துடன் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ஆனந்த்..!!!

சென்னையில் முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகத்தில் கண்ணாடி மீது மோதிக் கீழே விழுந்த அமைச்சர் ஆனந்த் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Advertisement

சென்னையில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலருமான ஆனந்த் தலையில் காயமடைந்தார். பசுமை வழிச் சாலையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அமைச்சர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார்.

கண்ணாடி மீது மோதியதில் நிலைதடுமாறி விழுந்த அமைச்சர்

முதல்வரின் முகாம் அலுவலகத்திற்குச் சென்ற அமைச்சர் ஆனந்த், அங்கு கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார் . இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், தலையில் காயமடைந்தார்.

இதையும் படிங்க: அதெல்லாம் விட்டுட்டு இந்த வேலையில் கவனம் செலுத்துங்க..! அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு...!!!

அங்கு இருந்தவர்கள் உடனடியாக அமைச்சரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்

தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ஆனந்துக்கு சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் வீடு திரும்பியுள்ளார்.காயம் முழுமையாக ஆறும் வரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஆளும் ஆட்சியை காப்பாற்ற தவெக போடும் பிளான்! டெல்லியில் நடந்த ரகசிய ஆபரேஷன்.. CM விஜய்யின் வியூகம் ஒர்க் அவுட் ஆகுமா..?!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அமைச்சர் ஆனந்த் #Minister Anand Injury #முதல்வர் விஜய் #சென்னை முகாம் அலுவலகம் #தமிழக அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story