×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Election 2024 | கூட்டம் கூட்டமாக கட்சியில் தொண்டர்கள்... குஷியில் இபிஎஸ்.!

Election 2024 | கூட்டம் கூட்டமாக கட்சியில் தொண்டர்கள்... குஷியில் இபிஎஸ்.!

Advertisement

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்திருக்கிறது.

அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது திமுக ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர் .

புதிதாக இணைந்த உறுப்பினர்களை வரவேற்ற இபிஎஸ் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒரே நாளில் கட்சியில் இணைந்ததால் குசியிலும் இருக்கிறார் 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk #Election 2024 #eps
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story