×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவு 3 மணிக்கு கீற்றுக் கொட்டகையில் கேட்ட சத்தம்! தனித்தனியாக தூக்கில் தொங்கியப்படி கிடந்த இளம் காதல் ஜோடி.... நடந்தது என்ன? பகீர் சம்பவம்.!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி தூக்கில் உயிரிழந்த நிலையில், தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி தூக்கில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் மற்றும் 16 வயது மாணவி திவ்யதர்ஷினியின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு; பதற்றமான சூழல்

தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையத்தைச் சேர்ந்த 19 வயதான பார்த்திபன் கொத்தனார் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 12-ஆம் வகுப்பு முடித்த திவ்யதர்ஷினியுடன் கடந்த சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சாதியப் பாகுபாடு மற்றும் மிரட்டல் தொடர்பாக பார்த்திபனின் குடும்பத்தினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதையும் படிங்க: காதலித்து திருமணமான 13 ஆண்டு கால காதல் வாழ்க்கை! ஒரே ஒரு பெண்ணால் ஒரே அறையில் சிதைந்த மூவரின் உடல்கள்..... பகீர் சம்பவம்!!!

நள்ளிரவில் சடலமாக மீட்பு

இந்த பரபரப்பான சூழலில், நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். தகவலறிந்த ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

ஆணவக் கொலையா? தற்கொலையா?

சம்பவத்துக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் சிறுமியின் உறவினர்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பெண் வீட்டாரே தங்களது மகனை ஆணவக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ஆணவக் கொலை குற்றச்சாட்டை பார்த்திபனின் குடும்பத்தினர் முன்வைத்துள்ளனர். அதேநேரத்தில், குடும்ப எதிர்ப்பால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து பொறையார் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உயிரிழப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

இதையும் படிங்க: 16 வயதில் திருமணமான இளம்பெண்! கணவர் வீட்டில் நாளுக்கு நாள் நரக வேதனை.... வாந்தி எடுத்த மறுநாளே மரணம்! திருமணமான 2 வருஷத்தில் நேர்ந்த கொடூரம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mayiladuthurai #Honour killing #inter caste love #police investigation #Tamil Nadu News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story