6 ஆண்டு வேலையை தூக்கியெறிந்துவிட்டு தவெக-வுக்கு களப்பணி.. வைரலாகும் இளைஞரின் ராஜினாமா கடிதம்.!
TVK News Today: தமிழக வெற்றிக் கழகத்துக்கு களப்பணியாற்ற, ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வேலையை உதறித்தள்ளிவிட்டு வருவதாக வெளியிட்ட முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தாலும், 6 ஆண்டுகளுக்கும் மேலாக தான் படித்த துறையில் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திக்க எதுவாக களப்பணிக்காக மாத சம்பளம் வழங்கும் வேலையை விட்டு வந்துள்ளதாக தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது.
கட்சிப்பணியில் ஆர்வம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் பட்டதாரி இளைஞர் ஆவார், சொந்தமாக பிரியாணி கடை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், கட்சியின் தேர்தல் பணிக்காக தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: இன்னுமா இது மாறல? புத்தாண்டுக்கு தேதி பார்த்து, மறுநாள் குவிந்த நோயாளிகள்.. டாக்டர் வேதனை.!
வேலையில் இருந்து விடுவிப்பு:
இதனிடையே, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சாதிக் பாஷா, தேர்தல் வரையில் தனது கட்சிக்காக களப்பணியாற்ற நினைத்துள்ளார். இதனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில், தனது வேலையை ராஜினாமா செய்ய கடிதம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், தவெகவுக்கு தேர்தல் பணி செய்ய வேண்டி இருப்பதால், தான் வேலையை ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.
பேசுபொருளாகிய தற்செயல்:
இந்த பதிவை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்த நிலையில், பலரும் அவரின் பதிவுக்கு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் அரசியலில் பல அதிரடி மாற்றங்களை தந்து வரும் நிலையில், தேர்தலுக்காக களப்பணியாற்ற இளைஞர் வேலையை விட்டுள்ளது பேசுபொருளாகி இருக்கிறது.