×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுகவில் வெடித்த மோதல்! பதவியைப் பிடிக்க நிர்வாகிகள் போட்டு பக்கா பிளான்... தலைமைக்குப் பறந்த அதிரடி புகார்..!!!

திமுக மாவட்ட மறுசீரமைப்பைத் தொடர்ந்து மதுரையில் புதிய பதவிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதரவான தொகுதிகளில் பதவி பெற முகவரியை மாற்றுவதாக எழுந்த புகாரால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

திமுகவில் நடைபெற்று வரும் நிர்வாக மறுசீரமைப்பு மதுரை மாவட்டத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மதுரையில், புதிய பதவிகளைக் கைப்பற்ற நிர்வாகிகளிடையே போட்டி அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்குச் சாதகமான தலைவர்களின் தொகுதிகளில் பதவி பெறுவதற்காக சிலர் முகவரியை மாற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஐந்து நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட மதுரை

திமுகவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாநகரச் செயலாளர் பதவியும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைப் பரவலாக்கி, புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிப்பதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம்.

இதையும் படிங்க: எம்எல்ஏ கோபிசன் எடுத்த திடீர் முடிவால்... அதிர்ச்சியில் மதுரை மாவட்டச் செயலாளர்! பின்னணியில் இருக்கும் பகீர் கிளப்பும் காரணம்..!!!

இதன்படி, மதுரை தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு, மத்தி என ஐந்து நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குக் கீழ் உள்ள முக்கியப் பொறுப்புகளையும் பெறுவதற்கான முயற்சிகள் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளன.

ஆதரவான தொகுதிகளில் முகவரி மாற்ற முயற்சி?

பதவி வாய்ப்பைப் பெறுவதற்காக மதுரையைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தங்களது இருப்பிட முகவரியை வேறு தொகுதிகளுக்கு மாற்றி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோரின் ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் தங்களுக்குத் தொடர்புடைய தலைவர்களின் தொகுதிகளுக்கு முகவரியை மாற்ற முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மதுரை அரசியலில் தனது செல்வாக்கு குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், முகவரி மாற்றம் தொடர்பான புகார்களும் கட்சிக்குள் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளன.

திமுக தலைமைக்கு புகார் கடிதம்

முகவரி மாற்ற நடவடிக்கைகளால் தங்களுக்கான பதவி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகக் கருதும் சில நிர்வாகிகள், அதற்கான ஆதாரங்களைத் திரட்டி கட்சித் தலைமைக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

நிர்வாக மறுசீரமைப்பின் நோக்கம் பாதிக்கப்படாமல் இருக்க, புகார்கள் மீது திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மதுரை கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! கொளத்தூர் MLA வி.எஸ். பாபுவின் உள் உறுப்புகள் செயலிழப்பு? வலிமையை இழந்த உடல்! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மதுரை திமுக #மாவட்டச் செயலாளர் பதவி #முகவரி மாற்றம் #DMK Restructuring #திமுக நிர்வாகிகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story