×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த 100 ஆண்டுகளும் தவெக ஆட்சி தான்! விஜய் அரசியல் குறித்து மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!

அடுத்த 100 ஆண்டுகளும் தவெக ஆட்சி தான்! விஜய் அரசியல் குறித்து மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!

Advertisement

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பெருளாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய மதுரை ஆதீனம், வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். மேலும், இனி வரும் 100 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகம்தான் தேர்தலில் வெற்றி பெறும் என அவர் கூறினார்.

விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார். தவெகவின் வளர்ச்சியும், விஜய்க்கு கிடைக்கும் மக்கள் ஆதரவும் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: லண்டன் பயணம் முதலீட்டுக்கா? இன்பச் சுற்றுலாவா? தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

அரசியல் மட்டுமின்றி ஆன்மீகம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும் மதுரை ஆதீனம் பேசினார். ஆன்மீகப் பணிகளுடன், நாட்டின் நலனுக்கான நல்ல அரசியலுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து மதுரை ஆதீனம் தெரிவித்த இந்தக் கருத்து, தவெக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேவேளை, அவரது 100 ஆண்டுகளுக்கு தவெக‌ என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு இப்போ கட்டம் சரியில்லை..  தவெக எம்எல்ஏ கனிமொழியி பரபரப்பு கருத்து!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Vijay #by election #Madurai Adhinam #vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story