தவெக மாநகர செயலாளர் முருகானந்தம் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்! நொறுக்கப்பட்ட கார் கண்ணாடி... படுகாயமடைந்த முருகானந்தம்! பெரும் பரப்பு...!!!
கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழக மாநகரச் செயலாளர் முருகானந்தம் காரில் சென்றபோது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழக மாநகரச் செயலாளர் முருகானந்தம் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காரில் சென்று கொண்டிருந்த அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து முருகானந்தத்தையும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரை வழிமறித்து தாக்குதல்
முருகானந்தம் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் கண்ணாடியை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உடைத்துள்ளனர். தொடர்ந்து முருகானந்தத்தின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெகவின் வெற்றி கஷ்டம் தான்...! வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர்.. பின்னணியில் யார்? வெளிவந்த அதிருப்தி அரசியல்!!!
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தாக்குதலில் படுகாயமடைந்த தவெக முருகானந்தம் சம்பவ இடத்தில் இருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டார். உடனடியாக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம கும்பலை தேடும் போலீசார்
தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்பகோணம் தாக்குதல் அரசியல் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது ஏற்கனவே இருந்த தனிப்பட்ட முன்விரோதம் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... அதிமுக-வில் இருந்து விலகி தவெக- வில் இணைந்த முக்கிய புள்ளி! பேரதிர்ச்சியில் எடப்பாடி...!!,