குடிச்சுட்டு கூத்தடுச்சு பொண்ணுங்க கூட கும்மாளம் போடுபவர்கள் எம்.ஜி.ஆர் ஆக முடியுமா? வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர்...! விஜய்யை வைத்து விளாசி தள்ளிய முனுசாமி! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அரசியலுக்கு வரும் நடிகர்களும் விமர்சனங்களின் மையமாக மாறியுள்ளனர். இந்த பின்னணியில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
விஜய்யை மறைமுகமாகச் சாடிய முனுசாமி
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் ஆளுமையுடன் இன்றைய நடிகர்களை ஒப்பிட முடியாது என்றும், எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்கள் மூலம் மக்களுக்குத் திருத்தமான சமூக கருத்துகளை விதைத்தவர் என்றும் கூறினார்.
திரை பிம்பத்தால் அரசியல் வெற்றி சாத்தியமில்லை
திரைப்படங்களில் மது அருந்துவது, பெண்களுடன் நடனமாடுவது, வன்முறை காட்சிகளில் நடிப்பது போன்றவற்றால் யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என முனுசாமி சாடினார். எம்.ஜி.ஆர் மது அருந்துபவர்களை திருத்தும் கதாபாத்திரங்களில் நடித்ததோடு, நிஜ வாழ்விலும் ஏழை எளிய மக்களுக்கு உதவித் தாய் உள்ளத்தோடு செயல்பட்டவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: விஜய்யை பார்த்து எனக்கு பயம் இல்லை.... காலை தூக்கி காட்டி மன்சூர் அலிகான் சொன்ன வார்த்தை! பேட்டியால் அரசியலில் பரபரப்பு...!
சொத்துக்களை வாரி வழங்கிய எம்.ஜி.ஆர்
இன்றைய நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அதில் ஒரு சிறு பகுதியைக்கூட மக்களுக்கு வழங்குவதில்லை என்றும், வெறும் திரை பிம்பத்தை வைத்துக்கொண்டு அரசியலில் சாதிக்க முடியாது என்றும் விஜய் அரசியல் குறித்து மறைமுகமாக விமர்சித்தார். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக போராடும் மனப்பாங்கு உள்ளவர்களே அரசியலுக்கு வர வேண்டும் என அவர் கூறினார்.
எதிரிகளுக்கும் உதவும் பண்பு
எம்.ஜி.ஆர் தனது எதிரிகளுக்கும் கூட உதவும் குணம் கொண்டவர் என்பதற்கு, அமைச்சர் துரைமுருகனின் கல்விச் செலவுகளை ஏற்ற சம்பவமே சாட்சி என முனுசாமி நினைவூட்டினார். இது அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் தேர்தலில் மீண்டும் தாய் உள்ளம் கொண்ட ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்றும், அதற்கு அதிமுக தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் முனுசாமி அழைப்பு விடுத்தார். நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை குறித்து அதிமுக மூத்த தலைவர் முனுசாமி முன்வைத்த இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.