எடப்பாடியை இருகரம் கூப்பி உற்சாகமாக வரவேற்ற கே.பி.அன்பழகன்! அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு..!!!
தருமபுரியில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சந்தித்து வரவேற்றது அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சென்று சந்தித்தார். இருகரம் கூப்பி உற்சாகமாக வரவேற்ற அவருக்கு, எடப்பாடி பழனிசாமியும் புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார். இருவரின் இந்த சந்திப்பு தருமபுரி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை நேரில் வரவேற்ற அன்பழகன்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியின் பக்கம் கே.பி.அன்பழகன் சாய்ந்திருந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தருமபுரிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பொங்கலுக்குள் தவெக ஆட்சியை கவிழ்க்க தீட்டிய சதி திட்டம்! ரகசிய ஆலோசனையால் பரபரப்பு...!!!
தொண்டர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு
அன்பழகனின் வரவேற்புக்கு எடப்பாடி பழனிசாமியும் புன்னகையுடன் பதிலளித்தார். இருவருக்கும் இடையே நடந்த இந்த சுமூகமான சந்திப்பு, கட்சிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையடுத்து தருமபுரி மாவட்ட அதிமுகவில் நீடித்து வந்த உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்து, கட்சி மீண்டும் ஒரே அணியாக வலுப்பெற்று வருவதாக தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக பேசப்படுகிறது. இருப்பினும், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில்தான் இதன் முழுமையான தாக்கம் தெரியவரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சுமையாக இருக்க விரும்பவில்லை...! அதிமுகவில் செந்தில் பாலாஜி... எஸ். பி. வேலுமணிக்கு செக் வைக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்...!!!