BREAKING: தவெகவில் இருந்து விலகி கூட்டமாக அதிமுகவில் இணைந்தனர்... காலையிலேயே CM விஜய்கு அதிர்ச்சி!!!
கோவையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் குறிஞ்சி மணிமாறன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் கட்சியில் இணைந்துள்ளனர்.
கோவை அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் மாவட்டச் செயலாளர் குறிஞ்சி மணிமாறன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தவெகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் இணைப்பு
இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய எஸ். ஜெகத்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். மேலும், மதிமுகவைச் சேர்ந்த மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயலாளர் எஸ். சண்முகமும் அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடர முடிவு செய்தார்.
இதையும் படிங்க: கூட்டம் கூட்டம்மா தவெகவில் இணைந்து கும்மாளம் போடுறாங்களே....விஜய்யின் தவெக கட்சிக்கு குவியும் ஆதரவு! கடுப்பில் எடப்பாடி...!!!
கோவையில் அரசியல் கவனம்
தகவல்களின்படி, தவெகவில் போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சில நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த இணைப்பு நிகழ்வுகள், கோவை மாவட்ட அரசியல் சூழலில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ஒரே நாளில் மாறிய அரசியல் கணக்கு! அதிமுக, திமுக, அமமுக விலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னால் எம்எல்ஏக்கள் உட்பட 60 பேர் தவெகவில் இணைவு...!!!