கொங்கு மண்டல கோட்டையை கைப்பற்றிய இபிஎஸ்! அதிமுக வுடன் கூட்டணி.... செம ஷாக்கில் செந்தில் பாலாஜி..!
தமிழக தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக கொங்கு மக்கள் முன்னணி அதிமுக கூட்டணியில் இணைந்தது. கொங்கு மண்டல அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டல அரசியலில் பெரும் திருப்பமாக கொங்கு மக்கள் முன்னணி அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி சந்திப்பு
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக தங்கள் கட்சி முழு வீச்சில் செயல்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING: அதிமுக கூட்டணியில் இணையும் பல கட்சிகள்...! 2026 தேர்தலில் முதல்வர் நீங்க தான்.... அரசியல் சூழலை சூடுபடுத்திய பிரபலம்!
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வலுவான கணக்கு
கொங்கு மண்டலத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக எடுத்துள்ள இந்த நடவடிக்கை, கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு அரசியல் களம் தற்போது புதிய கூட்டணி சமன்பாடுகளால் சூடுபிடித்துள்ளது.
திமுக முகாமுக்கு ஏற்பட்ட பின்னடைவு
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மக்கள் முன்னணியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அவர்களை திமுக கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் தீவிரமாக நடந்த நிலையில், திடீரென கொமமு அதிமுக பக்கம் சாய்ந்தது திமுகக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணி மாற்றத்தின் மூலம், கொங்கு மண்டலத்தில் தனது கோட்டையை பாதுகாப்பதுடன் அரசியல் வியூகத்திலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தனது அரசியல் ஆளுமையை நிரூபித்துள்ளதாக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் தேர்தலில் இந்த புதிய கூட்டணி எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: செம குஷியில் எடப்பாடி! அதிமுக கூட்டணியில் இணையும் கட்சி! அதிகரிக்கும் அதிமுக வின் பலம்!