×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண் எம்எல்ஏ விடம் அத்துமீறிய காங். நிர்வாகி! வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம்.... புதிய சர்ச்சை வீடியோவால் போலீசில் பரபரப்பு புகார்!!!

கேரள காங்கிரஸ் தலைமையகத்தில் பெண் நிர்வாகியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் செரியான் பிலிப்புக்கு எதிராக போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Advertisement

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் நிர்வாகியிடம் மூத்த நிர்வாகி ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.எல்.ஏ. வரவேற்பின் போது சர்ச்சை

தகவலின்படி, புதிய முதல்வர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த எம்.எல்.ஏ.-க்களை வரவேற்க காங்கிரஸ் முக்கிய பிரமுகரான செரியான் பிலிப் தலைமையக நுழைவாயிலில் நின்றிருந்தார்.

அப்போது, கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா அங்கு வந்தார். அவரை வரவேற்க சென்ற செரியான் பிலிப் திடீரென கட்டியணைத்து முத்தமிட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவரது கைகளை தட்டிவிட்டு விலகிச் சென்றார்.

இதையும் படிங்க: இரவு நேரத்தில் வயல்வெளியில் பெண்ணுடன் சிக்கிய அரசியல் கட்சி நிர்வாகி..... படம் பிடிப்பவர்களை செருப்பால் அடித்த கொடுமை!!!

வீடியோ வைரல்... கடும் எதிர்ப்பு

இதையடுத்து, மீண்டும் அவரை அணுக முயன்றதாக கூறப்படும் காட்சிகள் அங்கிருந்த சிலரின் செல்போன்களில் பதிவாகின. பின்னர் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

பெண் நிர்வாகியிடம் பொதுவெளியில் இவ்வாறு நடந்துகொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் மூத்த நிர்வாகி மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போலீசில் புகார்

இதனால், செரியான் பிலிப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹபீஸ் என்பவர் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kerala Congress #பிந்து கிருஷ்ணா #Cherian Philip #கேரள அரசியல் #Congress controversy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story