BREAKING: அதிமுகவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா....! எடப்பாடியின் ஆக்ரோஷமான பதில்... தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு.!!!
அதிமுகவில் இருந்து மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் இருந்து மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவலை முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவர்கள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 எம்.எல்.ஏ.க்கள் குறித்து கே.சி. பழனிசாமி தகவல்
தனது சமூக வலைதள பதிவில் பேசியுள்ள கே.சி. பழனிசாமி, கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் என்று அந்த ஐந்து எம்.எல்.ஏ.க்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு, “விரைவில் வெளியேறுங்கள்” என்று அவர் கோபமாக பதிலளித்ததாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக கட்சி அதிமுகவின் எதிரி இல்ல.... அதிமுகவின் உண்மையான எதிரி திமுகதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி அரசியல் பேச்சு..!!!!
அதிமுகவில் தொடரும் பரபரப்பு
ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேலும் ஐந்து பேர் விலகக்கூடும் என்ற இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சித் தலைமையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் நோக்கி நகர்கிறார்களா?
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் கவனம் பெற்று வருகின்றன. அதேநேரத்தில், அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எம்.ఎல்.ஏ.க்கள் விலகல் குறித்த தகவல்கள், மாநில அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!