எஸ்பிஐ வங்கியில் மு.க.அழகிரி மகள் காட்டிய கைவரிசை! வங்கி மேலாளர் கன்னத்தில் பளார்.... அதிர்ச்சி வீடியோ!!!
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கியதாக புகார். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் அடையாறில் செயல்படும் எஸ்பிஐ என்.ஆர்.ஐ கிளையில் வங்கி மேலாளரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது புகார் எழுந்துள்ளது. வங்கிக்குள் நடந்த இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மின்தூக்கி பழுதால் தொடங்கிய சர்ச்சை
அடையாறில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில்தான் SBI என்.ஆர்.ஐ கிளை இயங்கி வருகிறது. அண்மையில் அந்தக் கட்டடத்தின் மின்தூக்கி திடீரென பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், முதலில் கயல்விழியின் உதவியாளரை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் பதில் கிடைக்காததால், நேரடியாக கயல்விழியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மின்தூக்கி பழுது குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திக் திக் காட்சி! நடுரோட்டுல கயிறோட கைதி செய்த அதிர்ச்சி செயல்! போலீஸையே அதிரவைத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் வீடியோ...!!!
வங்கிக்குள் நடந்த தாக்குதல்
தகவலின்படி, தொலைபேசியில் தொடர்பு கொண்டது தொடர்பாக ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கிக்குச் சென்று மேலாளர் ஹர்ஷீன் சிங்கிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த மேலாளரை திடீரென கன்னத்தில் அறைந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் வங்கியின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு
கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் மற்றும் வங்கி வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: “வங்கிக்குக் குதித்து வந்து கைவரிசை!” எஸ்பிஐ மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள்.. சென்னையில் அரங்கேறிய மோதல்..!!”