1 முறை அல்ல 2 முறை அல்ல.. 18 நிமிஷத்துல மொத்தம் 7 முறை! மைக் பிடிச்சதும் அதிமுக எம்.எல்.ஏ சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை.... கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டுச் சிரித்த முதல்வர் விஜய்..!!!
மேகதாது அணை விவகாரம் குறித்த விவாதத்தின் போது 7 முறை குறுக்கீட்டால் பேச முடியாமல் தவித்த ஆர்.காமராஜின் நகைச்சுவை பேச்சு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையில் இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், எதிர்பாராத வகையில் ஒரு நகைச்சுவை தருணம் அவை முழுவதையும் சிரிப்பில் ஆழ்த்தியது. மன்னார்குடி தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.காமராஜ் பேசிய சில வார்த்தைகள், பதற்றமான சூழலை சில நிமிடங்கள் கலகலப்பாக மாற்றின.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அமைக்கத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையில் விரிவாக விளக்கமளித்தார். இதையடுத்து, டெல்டா விவசாயிகளின் சார்பில் சில கருத்துகளை பதிவு செய்ய ஆர்.காமராஜ் சபாநாயகர் அனுமதியுடன் எழுந்து பேசத் தொடங்கினார்.
இதையும் படிங்க: நானாக அதிமுகவிலிருந்து வெளியேறவில்லை...! எனக்கு அங்கே இதுதான் நடந்தது... நச் பதிலடி கொடுத்த ஓபிஎஸ்..!!!
7 முறை எழுந்தும் பேச முடியாத நிலை
ஆனால் அவர் பேச்சைத் தொடங்கிய உடனே இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். பின்னர் மீண்டும் காமராஜ் பேச அழைக்கப்பட்டபோதும், புதிய கேள்விகள் மற்றும் குறுக்கீடுகள் தொடர்ந்தன.
இப்படியாக ஒருமுறை அல்லது இருமுறை அல்லாமல் மொத்தம் ஏழு முறை காமராஜ் எழுந்து அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் பேசத் தயாரானபோது, வேறு உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் காரணமாக அவரது பேச்சு தடைபட்டது.
அவையைச் சிரிக்க வைத்த காமராஜின் பதில்
சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு அவையில் அமைதி திரும்பியதும், சபாநாயகர் மீண்டும் காமராஜை பேச அழைத்தார். அப்போது மைக் பிடித்த அவர், “சபாநாயகர் அவர்களே... கடந்த 18 நிமிஷமா நான் இங்கேயே காத்துக்கிட்டு இருக்கேன். இந்த 18 நிமிஷத்துல மட்டும் நான் பேசறதுக்காக 7 முறை சீட்டை விட்டு எந்திரிச்சு உட்கார்ந்துட்டேன். ஆனா இன்னும் ஒரு வார்த்தை கூட பேச முடியல” என்று சிரிப்பூட்டும் வகையில் கூறினார்.
அவரது இந்த யதார்த்தமான கருத்தைக் கேட்டதும் சபாநாயகர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சிரித்தனர். குறிப்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது இருக்கையிலேயே கலகலப்பாகச் சிரித்ததாக அவை வட்டாரங்கள் தெரிவித்தன.
பரபரப்புக்கு நடுவே ஒரு இலகுவான தருணம்
பொதுவாக அரசியல் வாதங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் அமளிகளால் கவனம் பெறும் சட்டசபையில், காமராஜின் இந்த டைமிங் நகைச்சுவை உறுப்பினர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. கடுமையான விவாதங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த இலகுவான தருணம், இன்றைய சட்டசபை கூட்டத்தொடரின் சுவாரசியமான நிகழ்வாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பரபரப்பு... மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 எப்போ தருவீங்க? சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட அதிமுக! உடனே பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா!!!