திடீர் விலகல்! திமுகவுடன் இனி கூட்டணி இல்லை....! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சி! செம ஷாக்கில் ஸ்டாலின்..!!!
60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகுவதாக அறிவித்துள்ளது. இனி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசியலை உலுக்கும் முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகால கூட்டணிக்கு முற்றுப்புள்ளி
கட்சியின் தேசிய தலைவரான காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கூட்டணியை இனி நீட்டிக்க வேண்டாம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: BIG BREAKING: தவெகவில் இணைகிறோம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 5,000 ஆதரவாளர்களுடன் கிளம்பிய அதிமுக புள்ளி.!
தமிழக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
தவெக கூட்டணியில் ஐயுஎம்எல்
இனிவரும் காலங்களில் ஐயுஎம்எல், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்படும் என்று காதர் மொகிதீன் உறுதிபட கூறினார். தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி உருவாகும் நிலை ஏற்படக் கூடாது என்பதோடு, மறைமுகமாக பாஜக ஆதிக்கம் அதிகரிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அகில இந்திய தலைமையுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னர், எதிர்காலத்தில் உருவாகும் தவெக கூட்டணி அரசில் ஐயுஎம்எல் பங்கேற்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். நல்லாட்சி வழங்கும் முயற்சிகளில் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் மற்றும் காவிரி விவகாரம் குறித்த கருத்து
தற்போது பெயர் சூட்டப்படாத புதிய கூட்டணியில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் காதர் மொகிதீன் தெளிவுபடுத்தினார். ஜனநாயகத்தில் வாக்களிப்பது இஸ்லாமியர்களின் குடிமைப் பொறுப்பாகும் என்று தாம் கூறிய கருத்து, குறிப்பிட்ட எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற பொருளில் அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.
இதனுடன், கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீர் பாதிக்கப்படும் என்ற கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமீபத்தில் பேசுபொருளான கட்சி அலுவலக சோபா விவகாரம் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: தவெகவுடன் கூட்டணி இல்லை.....! அதிரடியாக அறிவித்த கட்சி... பரபரக்கும் தமிழக அரசியல் களம்..!!!