×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Election2024: "நிர்மலா சீதாராமன், நிதியமைச்சரா.? இல்லை கந்து வட்டிக்காரரா.?" முதல்வர் ஸ்டாலின் சைலன்ட் அட்டாக்.!!

#Election2024: நிர்மலா சீதாராமன், நிதியமைச்சரா.? இல்லை கந்து வட்டிக்காரரா.? முதல்வர் ஸ்டாலின் சைலன்ட் அட்டாக்.!!

Advertisement

2024 ஆம் வருட பொது தேர்தல்  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் உட்பட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. பொதுத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்தார். இந்த பரப்புரையின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்து தவறுகளை பட்டியலிட்டதோடு அவரது குறைகளையும் சுட்டிக்காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

நடைபெற இருக்கும் பொது தேர்தலை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என குறிப்பிட்ட முதல்வர் இப்போதும் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் இந்தியாவை காப்பாற்றுவது மிகவும் கடினம் என தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு அமலாக்கத்துறை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றை தங்களது ஏவல் கருவிகளாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமரிடம் அதிக நிதிக்கு கோரிக்கை வைத்ததாகவும் அப்போது பிரதமர் மோடி நிதி அமைச்சரை அனுப்பி வைக்கிறேன் அவர் பார்வையிட்ட பின்பு நிதி வழங்குவார் என்று தெரிவித்ததாகவும் கூறினார். தமிழகத்திற்கு வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீங்கள் கேட்கும் போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று நக்கலாக பதில் சொன்னார். இதுபோன்று நக்கலாக பதிலளிப்பதற்கு என்றே அவருக்கு பதவி கொடுத்து வைத்திருக்கிறார்கள் எனக் கூறினார்.

மேலும் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து தமிழக அரசு பெற்ற கடனை மத்திய அரசு வழங்கிய நிதி போல காட்டுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் நிதியமைச்சர் 5,000 கோடி ரூபாயை தமிழக அரசிற்கு கொடுத்து விட்டோம். அதற்கு கணக்கு காட்டுங்கள் என கந்துவட்டிக்காரர் போல பேசுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். அது மத்திய அரசிடம் இருந்து வந்த நிதி அல்ல என்று கூறிய ஸ்டாலின் தமிழக அரசு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை அரசே செலுத்தும் எனவும் தெரிவித்தார். இது போன்ற ஆணவச் சிந்தனை கொண்டவர்களால் நாட்டு மக்களுக்கு ஒரு பயனும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#politics #Admk #dmk #bjp #Election 2024 #CM Stalin #pm modi #nirmala seetharaman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story