கடும் வார்த்தைபோர்! கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்.... டங்கமாரி ஊதாரி! CM விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை சீண்டிய அப்பா - மகன்! இன்ஸ்டா ஸ்டோரியால் உண்டான அரசியல் மோதல்!!!
சட்டப்பேரவையில் விஜய் - உதயநிதி இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைந்த நிலையில், இன்பன் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடந்த வார்த்தைப்போர் அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த சூழலில், உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் தொடங்கிய அரசியல் மோதல்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஒரு குட்டிக்கதையை குறிப்பிட்டார். அந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது”... விஜய் அரசை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் விஜய்யின் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு, “செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” என பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவு அரசியல் களத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இன்பன் உதயநிதியின் ஸ்டோரி சர்ச்சை
இந்த நிலையில், திமுக இளைஞரணி தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் வெளியிட்ட பதிவை இன்பன் உதயநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதனுடன், நடிகர் தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டங்கமாரி ஊதாரி’ பாடலின் சில வரிகளையும் பின்னணியில் இணைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பாடல் வரிகள் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு
இன்பன் உதயநிதியின் இந்த ஸ்டோரிக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை அரசியல் விவாதங்களுக்குள் இழுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த பதிவு நிரந்தரமாக வெளியிடப்படாமல், 24 மணி நேரத்தில் தானாக மறையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக மட்டுமே பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.