×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!

சவப்பெட்டியுடன் வேப்பமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!

Advertisement

18 வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது என்பவர் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வருவாய் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதை குறிப்பிட்டு சவப்பெட்டியை கொண்டு வந்திருந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சவப்பெட்டியை உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அவர் சாலையில் அமர்ந்து ஜனநாயகம் இருந்து விட்டதாக கூறி கோஷமிட்டதால், அவரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் வேட்பமான தாக்கல் செய்து வருகிறேன். 1997ம் ஆண்டு ஆறாவது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றேன். மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை பல தேர்தலில் போட்டியிட்டுயுள்ளேன். ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை, ஜனநாயகத்தின் மக்கள் வாக்களிக்க பணம் பெற்று வருகின்றனர் எனவும் ஜனநாயகம் செத்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Parliament election #Covai #Free lancing candidate #Death Box
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story