திமுகவின் மூத்த புள்ளி வரதராஜன் (86) காலமானார்! பெரும் சோகம்..!!!
சேலம் மாவட்டம் சங்கிரி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வரதராஜன், 86, சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ வரதராஜன் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கடந்த மூன்று மாதங்களாகத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1989 முதல் 1991 வரை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியவர்
வரதராஜன், 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்று, 1991ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இதையும் படிங்க: 40 நாட்களாக மறைக்கப்பட்ட ரகசியம்..! கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை.... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!
திமுகவில் பல்வேறு பொறுப்புகள்
சட்டமன்ற உறுப்பினராக இருந்ததுடன், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், கட்சியிலும் கல்வித் துறையிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த மூன்று மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த வரதராஜன் தற்போது உயிரிழந்துள்ளார். அவரது மறைவுச் செய்தி சங்ககிரி பகுதி மக்களிடையேயும் திமுக தொண்டர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: சர்ச்சை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை! கொண்டாடத்தில் திமுகவினர்..!!!