×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுகவின் B Team கமல் ஹாசனின் ம.நீ.ம உறுதி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு.!

திமுகவின் B Team கமல் ஹாசனின் ம.நீ.ம உறுதி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு.!

Advertisement

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "கமல் ஹாசன் கட்சியை ஆரம்பிக்கும்போதே நான் கமல் ஹாசன் திமுகவின் பி டீம் என கூறிவிட்டேன். ஜெயக்குமார் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும். 

அன்று கட்சியை தொடங்கியவர், இன்று திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அடுத்த வாரம் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்வதாக தெரிவித்துள்ளார். இன்று கமலின் அரசியல் கட்சி திமுகவின் பி டீம் என்பது செயல்வடிவம் பெறுகிறது. 

அவரை பொறுத்தமட்டில் கட்சியை தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. ஆதரவு கொடுத்து சலுகை பெறுவதே அவரின் ஆசை. அதனை செய்கிறார். மக்களுக்கு அடிப்படையான வசதிகளை செய்வதில் தவறில்லை. ஆனால், இரவோடு இரவாக இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் மட்டும் நலத்திட்டங்கள் செய்வது ஏன்?" என்று பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu political #தமிழ்நாடு அரசியல் #dmk #திமுக #முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் #Ex minister Jayakumar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story