முடிந்தது சமரச பேச்சுவார்த்தை... விஜய் அரசுக்கு விழுந்த முதல் இடி! வேலுமணி செய்த தரமான சம்பவம்! தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!!!
தவெக அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளனர்.
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த எஸ்.பி.வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவலின்படி, இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: விசில் பறக்கப்படும் விசிக கட்சி! கோட்டையை அதிரவைத்த திருமாவளவன் ஒற்றை வார்த்தை.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!
புகார் மனுக்கள் வாபஸ்
ஒற்றைத் தலைமை மற்றும் கூட்டணி விவகாரங்களில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, இருதரப்பும் சபாநாயகரிடம் பரஸ்பரம் பல புகார் மனுக்கள் அளித்திருந்தன. தற்போது நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில், அந்த மனுக்களை முழுமையாகத் திரும்பப் பெற இரு தரப்பும் உடன்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சட்டமன்றத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சட்டரீதியான மோதல்களுக்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுகவின் எண் பலமும் அதிகரிக்கக்கூடும் என்ற அரசியல் கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படுமா?
இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக, கடந்த காலங்களில் எஸ்.பி.வேலுமணி அணியினரிடமிருந்து பறிக்கப்பட்ட முக்கியப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, தலைமை அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை மீண்டும் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வேலுமணி அணியினரும் எந்த நிபந்தனையும் இன்றி தாய் கழகத்துடன் இணைய தயாராக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக அரசுக்கு புதிய சவால்
விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கூட்டணி அரசின் நிலைத்தன்மை குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில், அதிமுகவின் உள்ளக பலம் மீண்டும் ஒருங்கிணையக்கூடும் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.