திட்டமிட்ட குதிரை பேரம் அரசியல்! 126 தவெகவுக்கு எதிரான ஓட்டுன்னு உணராமல்.... அடுத்த கட்சியின் ஆதரவை தேடி செல்வது தான் உங்க அரசியலா.... எடப்பாடி கடும் ஆவேசம்.!!!
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான குதிரை பேர அரசியல் நடைபெற்று வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழக வெற்றி கழகம் பல்வேறு அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“மக்கள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர்”
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த ஒருவர், தற்போதைய சூழலில் மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் உருவாக்கியுள்ள ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெட்கக்கேடானது என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதிகளில் மக்கள் எதிராக வாக்களித்துள்ள சூழலையும் தவெக தலைமையினர் உணராமல் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்பு “தீய சக்தி” என விமர்சித்த கட்சிகளின் ஆதரவை தற்போது தேடி செல்வது எந்த வகையிலான அரசியல் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை”
அதிமுக தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாகவும், அதன்பின் சில நிமிடங்களிலேயே தவெக அமைச்சர் அறையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இதனை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குதிரை பேர அரசியல் என அவர் விமர்சித்துள்ளார். இதன் மூலம் தவெக அரசின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை வீழ்த்த முடியாது
இத்தகைய செயல்களால் அதிமுகவை அசைத்தோ, வீழ்த்தியோ விடலாம் என யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆட்சிகள் மாறினாலும் அரசியல் காட்சிகள் மாறவில்லை என்றும், மற்றவர்களின் ஆதரவை நம்பி செயல்படும் அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி சம்பவம் செய்யும் செங்கோட்டையன்! 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தவெகவில் இணைவு! எல்லையற்ற மகிழ்ச்சியில் விஜய்!